bizbilla

இ - காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட 'குடும்பஸ்ரீ' திட்டம்

இ - காமர்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட 'குடும்பஸ்ரீ' திட்டம்
Posted On :

21-Feb-2018 10:17 AM

கேரளாவில், 42 லட்சம் பெண்கள் இணைந்து நடத்தும், 'குடும்பஸ்ரீ' எனப்படும், பெண்கள் இயக்க கட்டமைப்பு, 'இ - காமர்ஸ்' எனப்படும், இணையவழி வர்த்தகத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளது.

கேரளாவில், இடது ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகிக்கும், மார்க்.கம்யூ., தலைவர், பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், 42 லட்சம் பெண்கள் இணைந்து, 'குடும்பஸ்ரீ' எனப்படும், அனைத்து பெண்கள் கட்டமைப்பை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.இந்த கட்டமைப்பில் இடம்பெற்றுள்ள பெண்கள், ஊறுகாய் தயாரிப்பது முதல், மென்பொருள் தயாரிப்பு வரை, அனைத்து துறைகளிலும் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், குடும்பஸ்ரீ இயக்க பெண்கள், இ - காமர்ஸ் வர்த்தகம் மூலம், தங்கள் பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளனர். 

வீடுகளில் தயாராகும் ஊறுகாய், ஜாம், மாவு, மசாலா பொருட்கள், எண்ணெய் வகைகள், அழகு சாதன பொருட்கள், கைவினை பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றை, இணையதளம் மூலம் விற்க திட்டமிட்டுள்ள இந்த இயக்கத்தினர், அதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

கேரளாவில், வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் பெண்கள், சுயமாக சம்பாதித்து வறுமையை ஒழிக்கும் நோக்கில், 1998ல், குடும்பஸ்ரீ திட்டம் துவக்கப்பட்டது. இது, கேரளாவில், பெண்களை பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்றவர்களாக உருவாக்கும் மாபெரும் இயக்கமாக திகழ்கிறது. 

Source:dinamalar